Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது
அரசியல்

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

Share:

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, கோலாலம்பூரிலுள்ள வணிக வளாகம் ஒன்றின் முன் நடைபெற்ற பேரணி தொடர்பாக, சர்ச்சைக்குரிய சமய போதகர் சம்ரி வினோத் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் நீதிபதி ஃபைசாநூர் ஹசன் முன்பு குற்றச்சாட்டானது வாசிக்கப்படவுள்ளது.

இத்தகவலை சம்ரி வினோத்-இன் வழக்கறிஞர் ஹனிப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, இப்பேரணி தொடர்பான விசாரணை, தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக முந்தைய தகவல்கள் கூறின.

இந்நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தையோ அல்லது பீதியையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அறிக்கைகள் வெளியிட்டது தொடர்பாக, தண்டனைச் சட்டம் பிரிவு 505(b)-இன் கீழ் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யுமாறு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Related News