Aug 26, 2026
Thisaigal NewsYouTube
PAS கட்சியை, பெர்சத்து முன்மாதிரியாக கொள்ள வேண்டும்
அரசியல்

PAS கட்சியை, பெர்சத்து முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17-

கட்சியை வலுப்படுத்துவதோடு, அடுத்தக்கட்ட தலைவர்களை அடையாளம் காண்பதில், PAS கட்சியை முன்மாதிரியாக கொள்ளும்படி, பெர்சத்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு வலியுறுத்தியுள்ளார், அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுதின்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், PAS கட்சியில் அதிகமான உறுப்பினர்கள் சேர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள, பெர்சத்து இப்பொழுதிலிருந்தே தயாராக வேண்டும் என்றார்.

அதன் தொடக்கமாக, வருகின்ற அக்டோபரில் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில், இளம் தலைவர்களை பெர்சத்து கட்சியின் தலைமைத்துவம் அடையாளம் காண்பது அவசியம் என மாஸ் எர்மியாதி கூறினார்.

Related News