Feb 19, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் 11 பெர்சத்து தொகுதிகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன
அரசியல்

ஜோகூரில் 11 பெர்சத்து தொகுதிகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.19-

ஜோகூர் மாநிலத்தில் 11 பெர்சத்து தொகுதிகள் அதிகாரப்பூர்வமாகத் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாகவும், தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைந்தது காரணமாகவும் இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொந்தியான் பெர்சத்து தலைவர் டத்தோ இசா அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

தாங்கள் பெர்சத்துவை மிகவும் நேசித்த போதிலும் கூட, மதம், இனம் மற்றும் தேசத்திற்காக ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தாங்கள் தள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கமானது கட்சியின் நோக்கத்தைத் தெளிவற்றதாக மாற்றியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையானது கட்சி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது என்றும் இசா அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து தேசியத் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் ஜோகூர் மாநில பெர்சத்து தலைவர் டத்தோ டாக்டர் சஹ்ருதீன் ஜமால் ஆகியோரால் தொகுதித் தலைவர்களை ஒன்றிணைக்க இயலாத காரணத்தால் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.

குறிப்பாக மாநிலத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உறுப்பினர்கள் மத்தியில் கட்சியின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டது என்றும் இசா அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

Related News

4 பெர்சத்து தொகுதிகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது, கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது – அஸ்மின்

4 பெர்சத்து தொகுதிகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது, கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது – அஸ்மின்

பாடாங் ரெங்காஸ், புக்கிட் குளுகோர் மற்றும் தாப்பா பெர்சத்து பிரிவுகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன

பாடாங் ரெங்காஸ், புக்கிட் குளுகோர் மற்றும் தாப்பா பெர்சத்து பிரிவுகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன

ஹம்ஸா ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கெதெரே எம்பி மீது நடவடிக்கை

ஹம்ஸா ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கெதெரே எம்பி மீது நடவடிக்கை

ஹம்ஸாவுக்கு ஆதரவாக மேலும் பல பெர்சத்து பிரிவுகள் கலைக்கப்படவுள்ளன

ஹம்ஸாவுக்கு ஆதரவாக மேலும் பல பெர்சத்து பிரிவுகள் கலைக்கப்படவுள்ளன

பெர்சத்து தலைவர்களை மீண்டும் ஏற்கத் தயார்: அம்னோ அறிவிப்பு

பெர்சத்து தலைவர்களை மீண்டும் ஏற்கத் தயார்: அம்னோ அறிவிப்பு

முகைதீன்தான் எனது முதல் எதிரி: கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹம்ஸா மறுப்பு

முகைதீன்தான் எனது முதல் எதிரி: கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹம்ஸா மறுப்பு