Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளையும் தக்கவைக்க பாரிசான் இலக்கு
அரசியல்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளையும் தக்கவைக்க பாரிசான் இலக்கு

Share:

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில், தற்போதுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ள பாரிசான் நேஷனல் இலக்கு வைத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ஜாஹிட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, மலாக்கா முதலமைச்சரும் மாநில பாரிசான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அப்துல் ராவுப் யூசோப், கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், அதனால் அனைவரும் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடே, மீண்டும் அதே அணியுடன் தேர்தலை சந்திக்க பிஎன் முடிவு செய்ததற்கான முக்கிய காரணம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலாக்கா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News