Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல் தோல்வி:  பின்னடைவு குறித்து ஆய்வு செய்ய ஆகஸ்ட் 8-இல் சிறப்புக் கூட்டம்
அரசியல்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல் தோல்வி: பின்னடைவு குறித்து ஆய்வு செய்ய ஆகஸ்ட் 8-இல் சிறப்புக் கூட்டம்

Share:

பட்டர்வொர்த், ஆகஸ்ட்.02-

ஜோகூர் மற்றும் நெகிர் செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய பக்காத்தான் ஹராப்பான், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

இது குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow இன்று வெளியிட்டுள்ள தகவலில், 16-வது பொதுத் தேர்தல் மற்றும் பிற மாநிலத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, புதிய தேர்தல் உத்திகள் வகுக்கப்படும் என்றும், குறிப்பாக முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகப் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பினாங்கு அமானா 2026 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Chow Kon Yeow இதனைத் தெரிவித்தார்.

Related News

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்