Oct 29, 2025
Thisaigal NewsYouTube
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியது
அரசியல்

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியது

Share:

வாஷிங்டன், நவ.5-


உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு, மலேசிய நேரப்படி இன்று நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்கு தொடங்கியது.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்பது தற்போதைய கோடிக்கணக்கானோரின் கேள்வியாகும்.

குடியரசுக் கட்சி வேட்பாளரான 78 வயது டொனால்டு டிரம்ப்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 60 வயது கமலா ஹாரிசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

வாக்குப்பதிவு தொடங்கி, மக்கள் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமா? என்ற ஒரு கேள்வியும் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே யார் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன..

அதிபர் தேர்தலில் ஓர் இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் நிலைவரத்தை அணுக்கமாக கண்காணித்து வருகின்ற அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
.
இந்நிலையில் சில நேரங்களில் செல்லப்பிராணிகள் அல்லது பூங்காவில் உள்ள மிருகங்கள் ஆகியவற்றை வைத்து கணிப்பது உண்டு.

தாய்லாந்தின் உள்ள பூங்காவில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை உள்ளது. இந்த நீர் யானையை கவரும் வகையில் இரண்டு தர்பூசணி பழங்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் டொனால்டு டிரம்ப் எனப் பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கமலா ஹாரிஸ் என பெயரிட்டு தனித்தனியே வைக்கப்பட்டது.

நீரில் இருந்து வெளியே வந்த குட்டி நீர் யானை நேராக சென்று டொனால்டு டிரம்ப் எனப் பெயர் எழுதப்பட்ட பழத்தை சாப்பிடுகிறது.

இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் ஒரு காணொளி உலக மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

Related News