கோத்தா கினபாலு, செப்டம்பர்.20-
விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனலும், அம்னோவும் போட்டியிடாது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று உறுதிப்படுத்தினார்.
எனினும் பாரிசான் நேஷனலும் அம்னோவும் தாங்கள் போட்டியிடக்கூடிய பொருத்தமான தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போது அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
73 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனலும், அம்னோவும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகும் என்று துணைப்பிரதமருமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.