இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரங்களைச் சமாளிப்பதற்கு நடப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்வது உட்பட அதற்காக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கம் நாளை மறுநாள் ஜுன் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
3 ஆர் விவகாரங்களை வேண்டுமென்றே பேசி வரும் தரப்பினரைச் சமாளிப்பதற்கு இந்த பேச்சுவார்த்தை அவசியமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஆசிய அனைத்துலக நடுவர் மையத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம், நிபுணத்துவ அமைப்புகள், அமலாக்கப்பிரிவினர்,சமூக சிவில் அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அசாலினா தெரிவித்தார்.
நடப்பில் உள்ள 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் போன்றவற்றை மறுமதிப்பீடு செய்வது, இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


