அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் டத்தோ செரி அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்ற இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் மிகச்சிறந்த அடைவு நிலையை அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான முதலீட்டாளர்ளை கொண்டு வருவதில் அமிருடின் ஷாரி வெற்றி கண்டுள்ளார் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அமிருடின் மீண்டும் மந்திரி பெசராக நியமிக்கப்படும் தகவலை கேட்டு அவரே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக சிலாங்கூர், செகின்ச்சானில்னில் மடானி விவசாய நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
