Oct 17, 2026
Thisaigal NewsYouTube

தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றும் உத்தேசமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றும் உத்தேசமில்லை

கோலாலம்பூர், நவ.13-


1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ தற்போதைக்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, பொது ஒழுங்கு தொடர்ந்து பாதுகாக்கப்படுதை உறுதி செய்வதற்கு 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், இன்னமும் தேவைப்படுகிறது என்று உள்துறை துணை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

தேச நிந்தனைச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு மீள் ஆய்வு செய்ததில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தவும், பொது ஒழுங்கை கட்டிக்காகவும் தேச நிந்தனைச் சட்டம் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது என்று முடிவு செய்துள்ளதாக பக்காத்தான் ஹராப்பான், பண்டார் கூச்சிங் எம்.பி. கெல்வின் யீ கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →