Jun 14, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் ஆன்மீகத் தலைவரை விமர்சித்தேனா? - சனூசி நோர் மறுப்பு
அரசியல்

பாஸ் ஆன்மீகத் தலைவரை விமர்சித்தேனா? - சனூசி நோர் மறுப்பு

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.03-

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசினைத் தாம் பகிரங்கமாக விமர்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் தேர்தல் இயக்குநர் சனூசி நோர் மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான காணொளி ஒன்று தொடர்பாக கருத்துரைத்த அவர், பாஸ் கட்சியின் போராட்டத்தைப் பற்றிய உறுப்பினர்களின் புரிதலை வலுப்படுத்துவது பற்றியும், அவர்கள் தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்வது பற்றியும் மட்டுமே தான் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், தான் யார் மீதும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது போல் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ள சனூசி, தமது பேச்சு, கட்சியையும், உறுப்பினர்களையும், பாஸ் தலைமைத்துவத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காணொளி ஒன்றில், பாஸ் கட்சிக்குத் தீங்கு விளைவிக்கும் எவரும், கட்சி அரசியலமைப்பில் வெளிப்படையாகத் தடை செய்யப்படாவிட்டாலும் கூட, அவர்கள் பாஸ் கட்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படமாட்டார்கள் என்று சனூசி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!