கோலாலம்பூர், நவம்பர்.22-
சபாவைத் தளமாகக் கொண்ட உப்கோ கட்சி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பில் எந்தவொரு கடிதத்தையும் தாம் இன்னும் பெறவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
அண்மையில் தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாடடுத்துறை அமைச்சர் பதவிலிருந்து விலகிய டத்தோ எவோன் பெனடிக்கைத் தலைவராகக் கொண்ட The United Progressive Kinabalu Organisation என்ற உப்கோ கட்சியிடமிருந்து அதிகாரப்பூர்வமான கடிதத்தைப் பெற்றப் பின்னரே இவ்விவகாரம் குறித்து தாம் கருத்துகைக்க முடியும் என்று ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
சபா மாநில வருவாயில் 40 விழுக்காடு வருவாயை அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று கோத்தா கினபாலு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்ததை ஆட்சேபிக்கும் வகையில் அமைச்சர் பதவியைத் துறந்த டத்தோ எவோன் பெனடிக், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
உப்கோவிடமிருந்து அதிகாரப்பூர்வமான கடிதம் கிடைத்த பின்னர் நாடாடாளுன்ற மக்களவையில் அக்கட்சியின் இருக்கையை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சபா, புதாதானில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜொஹாரி அப்துல் இதனைத் தெரிவித்தார்.








