Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது
அரசியல்

சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் குறித்து அக்கறை கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களின் நிலை குறித்து அக்கறைக் கொள்ள எங்களுக்கு உரிமையிருக்கிறது என்று பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், சிங்கப்பூரில் உள்ள எங்கள் சமூகமான மலாய்க்கார்களின் நிலை குறித்து ஒரு முஸ்லிம் என்ற முறையில் அக்கறை கொள்ள எங்களுக்கு முழு உரிமையிருக்கிறது என்று முகமட் சுக்ரி ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் இறையாண்மை மற்றும் சட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். ஆனால், ஒரு முஸ்லீம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகி விட முடியாது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் அந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் செயலில் பாஸ் கட்சியின் இரண்டு தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் முகமட் சுக்ரி ஓமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!