Feb 17, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் ரெங்காஸ், புக்கிட் குளுகோர் மற்றும் தாப்பா பெர்சத்து பிரிவுகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன
அரசியல்

பாடாங் ரெங்காஸ், புக்கிட் குளுகோர் மற்றும் தாப்பா பெர்சத்து பிரிவுகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.17-

பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் தலைமைத்துவத்தில் நம்பிக்கையில்லாத காரணத்தால், பாடாங் ரெங்காஸ், புக்கிட் குளுகோர் மற்றும் தாப்பா உள்ளிட்ட பல்வேறு பெர்சத்து கட்சியின் பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளன.

அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உட்பட 16 முக்கிய உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது குறித்து கவலையடைந்துள்ள அப்பிரிவுகள், சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி கலைக்கும் முடிவை எடுத்தன.

பாடாங் ரெங்காஸில், இச்சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு, செயல் தலைவர் மஸாலான் இப்ராஹிம் மற்றும் ஶ்ரீகண்டி தலைவர் ஸைனுன் நூர் முஹமட் ரிசாட் உட்பட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் உடனடியாக பதவி விலகினர்.

ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ராஜினாமாவுடன், அந்த பிரிவுகளானது அதிகாரப்பூர்வமாகத் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related News