Sep 21, 2026
Thisaigal NewsYouTube
வாக்குக்கு பணம் கொடுத்ததாக அவதூறு: சுவா தொகுதி பிஎச் வேட்பாளர் டத்தோ இயூ பூன் லாய் போலீசில் புகார்
அரசியல்

வாக்குக்கு பணம் கொடுத்ததாக அவதூறு: சுவா தொகுதி பிஎச் வேட்பாளர் டத்தோ இயூ பூன் லாய் போலீசில் புகார்

Share:

சுவா சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் டத்தோ இயூ பூன் லீ, தமக்கு எதிராக பரப்பப்படும் வாக்குக்கு பணம் கொடுத்ததாகக் கூறும் அவதூறு வீடியோ தொடர்பாக போர்ட்டிக்சன், புக்கிட் பெலண்டோக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாநிலத் தேர்தலை ஒட்டி, சுவா பகுதியில் மக்கள் பணம் பெற முண்டியடிப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. வைரலான வீடியோவின் பின்னணி, இடம், நேரம் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இயூ பூன் லீ குறிப்பிட்டார்.

தாம் வாக்கு வாங்குவதற்காக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், பண அரசியலை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். போலீஸ் துறை விசாரணைக்கு முன்பே தம்மையும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியையும் இதனுடன் இணைத்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தேர்தல் ஆணையமும் போலீஸ் துறையும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ இயூ பூன் லீ வலியுறுத்தியுள்ளார்.

அவதூறுகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தாமல், முதிர்ச்சியான ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்யுமாறு அவர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்

நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு

நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு

நஜிப்பின் வீட்டுக் காவல்: அமைச்சரவையிலிருந்து விலக அந்தோணி லோக் முன்வந்தார்

நஜிப்பின் வீட்டுக் காவல்: அமைச்சரவையிலிருந்து விலக அந்தோணி லோக் முன்வந்தார்