Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்
அரசியல்

நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்

Share:

கடந்த 2018 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ள மக்கள் நலச் சாதனைகளை மாநில இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் பட்டியலிட்டுள்ளார். "நிலையானது - செழிப்பானது - உள்ளடக்கியது" என்ற இலக்கோடு மக்களின் ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திற்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி, மாணவர் , சமூக நலம், மருத்துவ உதவி உட்ப மக்கள் நலன் சார்ந்த விவரங்களையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

• பிறக்கும் குழந்தைகளுக்கு தலா RM200 மானியம் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி கற்றல் வசதிகள்.

• உயர்கல்வி ஆரம்ப மானியமாக படிப்புக்கு ஏற்ப RM500 முதல் RM1,000 வரை நிதியுதவி.

• மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக RM1,500 மற்றும் மாதந்தோறும் RM200 உதவித்தொகை.

• மூத்த குடிமக்களுக்கு RM200, புதிய தம்பதியருக்கு RM500 திருமண ஊக்குவிப்பு நிதி.

• சிறு தொழில்முனைவோருக்கு RM3,000 மற்றும் ஏழை எளியோருக்கு RM85,000 மதிப்பிலான வீட்டுமைப்புத் திட்டம்.

• எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு RM2.4 மில்லியன் மற்றும் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சைக்கு RM1.9 மில்லியன் மருத்துவ நிதி ஒதுக்கீடு.

• மக்கள் முன்னெடுப்புத் திட்டங்களுக்கு RM681 மில்லியன் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு RM28.7 மில்லியன் செலவு.

• சாலை மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த RM497 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

• கடந்த 7 ஆண்டுகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக 33,697 மலிவு விலை வீடுகள் அமைப்பு.

நெகிரி செம்பிலான் மாநில மக்களின் நல்வாழ்வை உறுதி செய்துள்ள இந்தச் சாதனைகளும் செழிப்பான வளர்ச்சியும், "ஹராப்பான் தொடரட்டும்" என்ற முழக்கத்துடன் மேலும் நீடிக்கும் என டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

Related News