Oct 23, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள மிரட்டலை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைவதாக துன் மகாதீர் அறிவிப்பு
அரசியல்

மலாய்க்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள மிரட்டலை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைவதாக துன் மகாதீர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், டிச.12-


மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்து வரும் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மலாய்க்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிரட்டலை எதிர்கொள்வதற்கு தாங்கள் ஒன்றிணைவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களும் இன்று அறிவித்துள்ளனர்..

மலாய்க்காரர்களின் நலனுக்காக போராடி வரும் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை விசாரணை செய்யும் அணுகுமுறையை அரசாங்கம் கையாண்டு வருவதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

நடப்பு அரசாங்கத்தினால் பல மலாய்த் தலைவர்கள் விசாரணைக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கு மலாய்க்காரர்கள் ஒன்றுப்பட வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் ஒன்றிணைவதாக துன் மகாதீர் அறிவித்தார்.

மலாய்க்காரளுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்களுக்கு விசாரணை என்ற பெயரில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகலாம். சிறை, பிரம்படித்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு போன்ற தண்டனைக்கு ஆளாக நேரிடலாம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்களின் கெளரவம் மற்றும் அதிகாரம் குறித்து இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வட்டமேஜை கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் இதனை தெரிவித்தார்.

இந்த வட்ட மேஜைக்கூட்டத்தில் துன் மகாதீருடன், முன்னள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் அமைச்சர் அனுவார் மூசா, பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அகமட் உட்பட எதிர்க்கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பத்து பூத்தே தீவு, மலேசியாவிடமிருந்த கைநழுவிப் போனதற்கு காரணமானர் என்று அரச விசாணை ஆணையத்தினால் அடையாளம் காணப்பட்ட துன் மகாதீருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட வேண்டும் என்பதுடன் அவர் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது தொடர்பில் இந்த வட்டமேசைக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மலாய்க்காரர்கள் இந்த நாட்டில் ஒன்றுப்பட்ட சக்தியாக விளங்குவதற்கு அவர்கள் ஒன்றிணைவது மிக அவசிமாகும். இல்லையேல், அவர்களின் அதிகாரம் இழக்கப்பட்டவர்களாகி விடுவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தங்கள் முன்னிலையில் உள்ள ஒரு பொது எதிரியை எதிர்கொள்தற்கு தாங்கள் ஒன்றிணைவதற்கு உடன்பாடு கண்டுள்ளதாக துன் மகாதீர் அறிவித்தார்.

Related News