Oct 17, 2026
Thisaigal NewsYouTube

உறுதி செய்தது உள்துறை அமைச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உறுதி செய்தது உள்துறை அமைச்சு

கோலாலம்பூர், அக்டோபர் 16-

சமூக இல்லங்களிலிருந்த சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய GISB, உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட அல் – அர்க்காம் கும்பலினால் அமல்படுத்தப்பட்ட அவுரத் முஹம்மதியா போதனைகளைப் பின்பற்றி வந்துள்ளனர் என்பதை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் நேற்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் போதனைகளை தாங்கள் நிறுத்தி விட்டதாக அவர்கள் கூறும் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்றும், விசாரணை முடிவுகள் வேறுவிதமாக காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் இருந்து சேகரிக்கப்படும் ஆதாரங்களை மட்டுமே தனது அமைச்சு நம்பும் என்று saifuddin கூறினார்.

GISB-யில் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடந்திருக்கிறன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.. எனவே, GISB மீதான விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்று சைபுதீன் கூறினார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 18 நாடுகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் விசாரணைகளை மேற்கொள்வது அவ்வளவு இலகுவானது அல்ல என்பதையும் சைபுதீன் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →