Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நூருல் இஸா, சைஃபுடினின் நியமனம் கட்சிக்குக் கூடுதல் பலமே – ஃபாமி ஃபாட்ஸீல் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நூருல் இஸா, சைஃபுடினின் நியமனம் கட்சிக்குக் கூடுதல் பலமே – ஃபாமி ஃபாட்ஸீல் தகவல்

கோலாலம்பூர், ஜூன்.22-

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வாரும் நம்பிக்கைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் அக்கட்சியின் இணைத் தேர்தல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டது, வரவிருக்கும் தேர்தல்களில் பிகேஆருக்கு நன்மையைக் கொடுக்கும் என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபாட்ஸீல் தெரிவித்தார்.

இருவரும் ஏற்கனவே இந்தப் பொறுப்பை வகித்தவர்கள் என்றும், கட்சி வியூகங்களை வகுப்பதில் அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டு நியமனம் பிகேஆர், நம்பிக்கைக் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கம் ஆகியவற்றுக்குச் சாதகமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஃபாமி நம்புகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →