பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம், கட்சியிலிருந்து விலகிய நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிகேஆர் மீது தொடர்ந்து நடத்தி வரும் தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்குப் பதிலாக, தங்களது போட்டியாளர்களான அம்னோ மற்றும் பெரிகாத்தான் நேஷனலுக்கு உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தவணைகளாக பாசீர் கூடாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஹசான் காரிம், அந்த நால்வரையும் “4 பேர் கும்பல்” என விமர்சித்துள்ளார்.
மேலும், அன்வார் மற்றும் பிகேஆர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் மூலம், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாமா கட்சிக்கு ஆதரவைப் பெற்று விடலாம் என அவர்கள் நினைப்பது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது குறை இருந்தால் அதனை விமர்சிக்கலாம் ஆனால் அன்வார் மற்றும் பிகேஆரை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது பெர்சாமாவை வளர்க்க உதவாது என்றும் ஹசான் காரிம் தெரிவித்துள்ளார்.








