Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்
அரசியல்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

Share:

வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அம்மாநிலம் முழுவதும் நடைபெறும் பல்வேறு பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அவற்றில் முக்கியமாக, தாமான் தம்போய் இந்தாவில் நடைபெறும் "பிரதமருடனான இந்திய கலாச்சார இரவு" என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திய சமூகத்தினரைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறவுள்ளார்.

முதற்கட்டமாக பிற்பகல் 3.30 மணியளவில் குலாய்யிலுள்ள தாமான் துரோபிகாவில் நடைபெறும் கித்தா கெங் மதானி அனக் மூடா புக்கிட் பாத்து நிகழ்ச்சியில் வாக்காளர்களைச் சந்தித்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதைத் தொடர்ந்து, 4.50 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் சமூகத் தலைவர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்று, அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்திக்கிறார்.

மேலும், மாலை 6.00 மணியளவில், தம்போய், தாமான் மேலோர் பகுதியில் நடைபெறும் கெம்பாரா இன்ஸ்பிரசி பெலியா அகார் உம்பி இளைஞர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதன் பின்னர், 7.45 மணியளவில் தாமான் தம்போய் இந்தாவில் இந்தியர்களுடனான கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதன் பின்னர், இரவு 8.35 மணியளவில் சீன சமூகத்தினருடன் இரவு விருந்திலும், 9.30 மணியளவில் ஃபெல்டா உலு தெப்ராவ் மண்டபத்தில் நடைபெறும் ஜோகூர் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இறுதியாக, இரவு 10.45 மணியளவில் கெம்பாஸ்-இல் உள்ள செம்பாகா உணவக வளாகத்தில் நடைபெறும் மாலாம் அனக் மூடா கெம்பாஸ் நிகழ்ச்சியுடன் இன்றைய தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்