Sep 24, 2026
Thisaigal NewsYouTube
588 விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல்!
அரசியல்

588 விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல்!

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை மொத்தம் 588 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தெரிவித்துள்ளது.

இதில் 44 புகார்கள் தொடர்பாகப் போலீஸ் அறிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று புகார்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறைகளை ராணுவத் தளபதி ஜெனரல் தான் ஸ்ரீ அஸ்ஹான் முகமது ஒத்மான் னுடன் இணைந்து பார்வையிட்ட பின்னர் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் நவடிக்கையில் மலேசிய ஆயுதப்படை மற்றும் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 20,607 வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

Related News