Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவுக்கு தடை? – அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு: மந்திரி பெசார்  தகவல்
அரசியல்

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவுக்கு தடை? – அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு: மந்திரி பெசார் தகவல்

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், விஸ்மா நெகிரி அரசாங்க கட்டடத்திற்குள் நுழையவும், தங்களது பணிகளை மேற்கொள்ளவும், ஆட்சிக்குழுக் கூட்டங்களை நடத்தவும் வாய்மொழி உத்தரவு மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு நேற்று புதன்கிழமை முதல் நடைமுறையில் இருப்பதாகக் கூறிய அவர், தடை விதித்த அதிகாரத் தரப்பின் பெயரை வெளியிட மறுத்து விட்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் பொறுப்புகளில் இருப்பதாகவும், அவர்களின் பதவி இன்னும் செல்லுபடியாகும் என்றும் இஸ்மாயில் கூறினார்.

தமக்கு மட்டும் விஸ்மா நெகிரிக்குள் நுழையத் தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் தமக்குத் தெரியாது என்றும், நீதிமன்ற உத்தரவு இல்லாத நிலையில் ஆட்சிக்குழுவினரின் பணிகளுக்கு தடை விதிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில நெருக்கடியின் உச்சக்கட்டமாக 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் மாநில அரசாங்க செயலக கட்டடத்திற்குள் நுழையவும், தங்கள் பணியை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related News