Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் இடைநீக்கம்: தன்னிச்சையான முடிவு அல்ல என்கிறார் ஸாஹிட்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் இடைநீக்கம்: தன்னிச்சையான முடிவு அல்ல என்கிறார் ஸாஹிட்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை இடைநீக்கம் செய்தது தன்னிச்சையான முடிவு அல்ல என்றும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பது, 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ் சங்கங்களின் பதிவகத்தின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனலுக்குள் ஏற்பட்ட சில குறைபாடுகளின் காரணமாகவே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று புகார் அளித்திருக்கக்கூடும் என்றும் ஸாஹிட் தெரிவித்தார்.

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரிக்காத்தான் நேஷனலுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தை அமைதியாக அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பெரிக்காத்தான் நேஷனல் இடைநீக்கத்திற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கூறியுள்ளார்.

Related News