அடிஸ் அபாபா, நவம்பர்.21-
இளம் மலேசியர்களும், ஆப்பிரிக்க இளைஞர்களும், தங்களது காலணித்துவ மனநிலை மற்றும் ஏகாதிபத்திய கலாச்சாரங்களிலிருந்து, உணர்வுப்பூர்வமாக வெளியே வரவேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியே வந்தால் தான் அவர்கள், தங்களது தனித்திறன்களை உணர்ந்து, அதன் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இளைஞர்கள் தங்களது நாட்டையும், பொருளாதார நிலையையும் மறுகட்டமைப்பதில் நேரடியாக பங்காற்ற வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரப் பெற்ற பல நாடுகளில் கூட, இன்னமும் காலணித்துவ மனநிலை தொடர்வதாகக் குறிப்பிட்ட அன்வார், அந்நாடுகள் காலணித்துவ முதலாளிகளைப் போல் நடந்து கொள்வதாகவும் நேற்று எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தெரிவித்தார்.








