பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பிறை தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் இராமாசாமிக்கு பக்கபலமாக இருந்து வந்தவரான செபராங் பிறை நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினரான டேவிட் மார்ஷல், தாம் 15 ஆண்டு காலமாக இருந்து வந்த டிஏபி யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டிஏபி சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜு போட்டியிடுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சிவசுந்தரம் ராஜலிங்கம் போட்டியிடும் அதேவேளையில் முடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


