Sep 25, 2026
Thisaigal NewsYouTube
"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்
அரசியல்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.07-

ஜசெக கட்சியை உள்ளடக்கிய மாநில ஆட்சியில் அங்கம் வகிப்பதை விட, தமது பதவியைத் துறப்பதே மேல் என ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி தெரிவித்துள்ளார்.

இஸ்கண்டார் புத்ரியில் இன்று நடைபெற்ற பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திர துவக்க விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “பாரிசான் நேஷனலுக்கு வாக்களிப்பது ஜசெகவுக்கு ஆதரவளிப்பதற்கு சமம் என்ற குற்றச்சாட்டை மறுத்து, அதை “அவதூறு” என்று விவரித்தார்.

மேலும், இறைவனின் அருளால், ஜோகூர் சுல்தான் மற்றும் ஜோகூர் ரீஜென்ட் ஆகியோரின் ஒப்புதலுடன் தாங்கள் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் சூழ்நிலையில், ஜசெக கட்சியுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்றும் ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தாம் மந்திரி பெசாராகப் பதவி வகிக்கப் போவதில்லை என்றும், இது தான் ஜோகூரின் குணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதை பாரிசான் நேஷனல் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், கூட்டரசு அளவிலான கூட்டணிக் கட்சியான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் அல்லது முடா ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளும் சாத்தியக்கூறு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பானும் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து