நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சென்னா சட்டமன்றத் தொகுதியில் டிஏபி கட்சியின் தேசியச் செயலாளரும் அமைச்சருமான அந்தோனி லோக் தனது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளக் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்று டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஓங் கியான் மிங் தனது பகுப்பாய்வில் தெரிவித்துள்ளார்.
சுமார் 47.8 சதவீத மலாய் வாக்காளர்களைக் கொண்ட சென்னா தொகுதியில், நிலவும் சில மலாய் வாக்காளர்களின் அரசியல் மாற்றுக் கருத்துகள் காரணமாக இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை முன்கூட்டியே கணிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலவரம் குறித்துப் பேசியுள்ள அவர், பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல் சவால்கள் குறித்தும், தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஆகிய கூட்டணிகளின் தேர்தல் வியூகங்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.








