தமக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்பும் / பின்பும் வெவ்வேறு இடங்களில் மூன்று முறை அவதூறு விளைவித்ததாக bersatu கட்சியின் தலைவர் tan sri முகைதீன் யாசினுக்கு எதிராக ஜ.செ.க. தலைவர் lim guan eng அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
தமக்கு எதிராக கூறியுள்ள அவதூறு குற்றச் சாட்டை மீட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்குமாறு முன்னாள் நிதி அமைச்சருமான lim guan eng விடுத்துள்ள கோரிக்கையை முகைதீன் யாசின் புறக்கணித்து விட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறு வழக்கை lim guan eng தாக்கல் செய்துள்ளார்.
Yayasan Albukhary அறநிறுவனத்தின் வரிவிலக்கு சலுகைக்கான அங்கிகாரத்தை முன்னாள் நிதி அமைச்சர் என்ற முறையில் தாம் ரத்து செய்ததாக முகைதீன், பகிரங்கமாக குற்றச்சாட்டியதைத் தொடர்ந்து அவர் அந்த குற்றச் சாட்டை மீட்டுக்கொண்டு மன்னிப்பு கேட்குமாறு lim guan eng வேண்டுக்கோள் விடுத்து இருந்தார்.
இந்த அவதூறு குற்றஞ்சாட்டு, அனுபவமிக்க செல்வாக்குமிக்க அரசியல்வாதியான தனக்கு, பெரும் அவமானத்தையும், தன் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாகவும் Guan Eng கருத்துரைத்தார்.