கோலாலம்பூர், ஜூலை 5-
காப்பார் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Selat Klang சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி, தனது தொகுதியை காலி செய்ய வேண்டும் என்று MUDA கட்சியின் சிலாங்கூர் மாநிலம் இன்று வலியுறுத்தியுள்ளது.
BERSATU கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக கடந்த சட்டமன்றத் தேர்தலில் Selat Klang தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மடானி அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கியதற்காக பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாம் சட்டமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் Selat Klang சட்டமன்றத் தொகுதியை அப்துல் ரஷித் ஆசாரி, நியாயமாக காலி செய்தாக வேண்டும் சிலாங்கூர் மூடா கோரிக்கை விடுத்துள்ளது.
Selat Klang சட்டமன்றத் தொகுதியை அப்துல் ரஷித் காலி செய்யாமல் இருந்து வருவது, கடந்த 2022 ஆம் ம்ஆண்டு நவம்பர் மாதம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்சித் தாவல் தடை சட்டத்தை அவர் மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அந்த சட்டம் ஒரு முன்னுதாரண சட்டாகும். எதிர்காலத்தில் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழ்நிலை நிலவுவதை தவிர்க்க, கட்சித் தாவும் நபர்கள் தங்கள் தொகுதியை காலி செய்ய வேண்டும் என்று அந்த சட்டம் வலியுறுத்துகிறது.
எனவே Selat Klang தொகுதியை காலி செய்யாமல் இருந்து வரும் அப்துல் ரஷித்துக்கு எதிராக அத்தொகுதி காலியாகி விட்டது என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபா நாயகர் அறிவிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில MUDA ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.








