பினாங்கு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு டிஏபி வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்று அதன் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் டிஏபியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வேட்பாளர்கள் பட்டியலிருந்து விடுபடும் அதேவேளையில் புதிய முகங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டிஏபி இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தம்முடைய இந்த அறிவிப்பு, நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தியை தரலாம். ஆனால், இது தவிர்க்க முடியாததாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து மூன்று தவணைக் காலமாக பினாங்கை தற்காத்து வரும் டிஏபி, நான்காவது தவணையாக பினாங்கை தற்காக்க முனைந்துள்ளது. மாநிலத்தை தற்காக்கும் இந்த முயற்சியில் டிஏபி என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ அவற்றை செய்தாக வேண்டியள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாத பினாங்கு மாநில நடப்பு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
