Apr 21, 2026
Thisaigal NewsYouTube
இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி
அரசியல்

இன்று நடைபெறும் முடா உள்கட்சித் தேர்தல்: சையத் சாதிக்-இன் நிழலில் இருந்து வெளியேறும் ஒரு முயற்சி

Share:

முடா கட்சியானது நீண்ட காலமாக தாமதித்து வந்த தனது முதல் உள்கட்சித் தேர்தலை இன்று சனிக்கிழமை நடத்துகிறது.

இத்தேர்தலானது, அக்கட்சியின் தோற்றுநர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான்னின் தலைமைத்துவ நிழலில் இருந்து விலகி தனித்த பாதையில் முன்னேறுமா? என்பதை சோதிக்கும் முயற்சியாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மொத்தம் 125 பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ள நிலையில், கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 25 இடங்களுக்கு 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தங்களுக்குள், தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய தலைமைப் பதவிகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

ஜசெக உட்பட, மத்திய செயற்குழுக்களைக் கொண்ட வேறு பல அரசியல் கட்சிகளைப் போன்றே, முடா-வும் தேர்தல் மாதிரி ஒன்றைப் பயன்படுத்துகிறது.

பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசிய பல வேட்பாளர்கள், இடைக்காலத் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜீஸ், மத்திய செயற்குழுவில் ஓர் இடத்தைப் பெறும் பட்சத்தில், அவர் முறையாக 'முடா' கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே, இன்று காலை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமிரா ஆயிஷா அப்துல் அஜீஸ் தேர்தல் முடிவுகள் மாலை 4.30 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அதேவேளையில், முடா கட்சியானது அதன் சமூக நலக் கொள்கைகளில் குறிப்பாக, சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் நீதி ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, மூடா கட்சியின் தோற்றுநரான Syed Saddiq இத்தேர்தலில் போட்டியிடாத நிலையில், இக்கருத்துக் கணிப்புகள் 'Muda' கட்சியின் அடுத்த கட்டத்தை வரையறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!