குவாந்தன் ,ஆகஸ்ட் 19-
3R எனப்படும் மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு தன்னுடைய அரசியல் லாப நோக்கத்திற்காக பேசிய மலேசிய முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது என தெங்கு மஹ்கோடா பகாங் -ங்கின் அந்தரங்க செயலாளர் அமீர் சியாபிக் ஹம்சா கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் நெங்கிரி,சட்டமன்ற தொகுதிற்காக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஆட்சியாளர்கள் மன்றம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அதே சமயம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு பேசிய முகிடின் மீது, நேற்று இரவு 10 மணிக்கு குவந்தான் வட்டார போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.








