Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்கார்களின் ஆதரவு பாரிசான் நேஷனலுக்கு மாறுகிறது
அரசியல்

மலாய்க்கார்களின் ஆதரவு பாரிசான் நேஷனலுக்கு மாறுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 30-

நாட்டில் மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவு, பாரிசான் நேஷனலுக்கு மெல்ல மாறி வருவது குறித்து பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியான கெராக்கான் அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை தொடருமானால் வருகின்ற பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பேரிடியாக மாறலாம் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டாக்டர் டொமினிக் லாவ் அச்சம் தெரிவித்தார்.

கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட நெங்கேரி மற்றும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர், மஹ்கோட்டா ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் பாரிசான் நேஷனல் அபரிமித வெற்றி பெற்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பாரிசான் நேஷனலுக்கு பெரும்பான்மை வாக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலின் பெரும்பான்மை நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும் டொமினிக் லாவ் சுட்டிக்கட்டினார்.

இதன் தொடர்பில் அண்மைய இடைத் தேர்தல்கள் முடிவு குறித்து பெரிக்காத்தான் நேஷனல் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்