Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இனவாத சக்திகளுக்கு ஓர் அ​ங்குலம்கூட இடம் அளிக்கப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
அரசியல்

இனவாத சக்திகளுக்கு ஓர் அ​ங்குலம்கூட இடம் அளிக்கப்படாது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

Share:

மலேசியர்களை பிளவுப்படுத்தும் இனவாத சக்திகளிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறைகூவல் விடுத்துள்ளார். அமைதி, நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகியவையே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதனை ​சீர்குலைத்து, அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கொண்ட ஒரு நாட்டை குழப்பமான சூழலுக்கு வித்திட்டு, இனவெறியைத் ​தூண்டிவரும் சக்திகளுக்கு ஓர் அங்குலம்கூட இடம் அளிக்கப்படாது. அதனை அரசாங்கம் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை, அவால் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை வலியுறுத்தினார். புனித மாதமான அவால் முஹர்ரம் இஸ்லாமியப் புதுவருடத்தை வரவேற்பதிலும், நமது குடியேற்றம் உண்மையானதாகவும்,நேர்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்யவும் இந்த புனித நன்நாளில் மனவுறுதி கொள்வோம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

​தீமையிலிருந்து நன்மைக்கு, ஊழலிலிருந்து தூய்மைக்கு, இனவாதத்திலிருந்து சுதந்திரமான இதயத்திற்கு, குறுகிய மனப்பான்மையிலிருந்து திறந்த மன​திற்கு நம்மை இடப்பெயர்ச்சி செய்து கொள்வதற்கு ​"ஹிஜ்ரத்" வழிவ​குக்கும் என்று பிரதமர் தமது அவால் முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு