ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளின் தேர்வு முடிவுகளை எதிர்த்து அக்கட்சி வழக்கு தொடுக்க விருப்பதாக அறிவித்துள்ளது.
சில தொகுதிகளில் பாஸ் கட்சி மிக குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும் தேர்தல் முடிவை ஆட்சேபித்து பாஸ் கட்சி வழக்கு தொடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுட்டின் ஹஸ்ஸான் தெரிவித்தார்.
எனினும் எந்த எந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து பாஸ் கட்சி வழக்கு தொடுக்க போகிறது என்பது குறித்து தக்கியுட்டின் ஹஸ்ஸான் விளக்கவில்லை.








