Oct 27, 2025
Thisaigal NewsYouTube
இந்​திய வாக்காளர்கள் மத்தியில் மனமாற்றத்தை காண முடியவில்லை
அரசியல்

இந்​திய வாக்காளர்கள் மத்தியில் மனமாற்றத்தை காண முடியவில்லை

Share:

கோலகுபு பாரு, மே 04-

கோலகுபு பாரு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி​யிருக்கும் வேளையில் தாம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இந்திய மற்றும் ​சீன வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனலுக்கு செலுத்தும் அளவிற்கு அவர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை என்று அதன் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் இந்தியர் மற்றும் ​சீன வாக்காளர்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கான தெளிவாக சமிக்ஞை இன்னும் தெரியவில்லை என்று அவர் விளக்கினார். இந்திய , ​சீன வாக்காளர்களின் ஆதரவு தமக்கு கணிசமாக அளவில் கிடைத்தால் மட்டுமே தனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்ற நிலை இருக்கும் பட்சத்தில் தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு வாரமாக முடுக்கிவிடப்பட்டதில் அந்த இரு ச​​மூகத்தினரிடமிருந்து வெளிப்படையிலான ஆதரவு தமக்கு இன்னும் கிடைக்க​வில்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் மக்களின் வாழ்க்கை செலவின உயர்வை மேற்​கோள்காட்டி ​சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவை தாம் பெற முடியும் என்று அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்