Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தொகுதி எல்லை மறுசீரமைப்புக்கு ஆளும், எதிர்க்கட்சி தரப்பு உடன்பட வேண்டும்!
அரசியல்

தொகுதி எல்லை மறுசீரமைப்புக்கு ஆளும், எதிர்க்கட்சி தரப்பு உடன்பட வேண்டும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24-

நாட்டில் தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பை மேற்கொள்வதற்கான அணுகுமுறையில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே இணக்கம் காணப்பட வேண்டும் என பெரிக்காதான் நசியனால்-லைச் சேர்ந்த இந்திரா மக்கொத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் அப்துல்லா வலியுறுத்தினார்.

நடப்பிலுள்ள தொகுதி எல்லை வரையறை, குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உள்ளதாக கூறிய அவர், அக்கட்சியின் பெயரை குறிப்பிடவில்லை.

தொகுதி எல்லை சீரமைப்பு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு, பல்லின மக்கள், உள்ளூர் மக்களின் தொகை உள்ளிட்ட விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு செய்தது போல, மலாய்க்காரர்களின் ஆதிக்கமிக்க தொகுதிகள் அல்லது கலப்பு தொகுதிகளாக வேண்டுமென்றே உருவாக்க கூடாது. குறிப்பாக, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சீரற்ற நிலை நிலவியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்புக்கான விதிமுறை, கூட்டரசு அரசியலைமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படுமாயின் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் BERSIH ஏற்பாடு செய்திருந்த நேற்றைய கருத்தரங்கில் சைப்புடின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்