புத்ராஜெயா, ஜன. 6-
நஜீப்பின் மேல்முறையீட்டு வழக்கில் சட்டப் பார்வையாளராக ஆஜராகுவதற்கு பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசானுக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் ஹசான், வழக்கறிஞர் அங்கியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியது பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.
நஜீப் வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின், பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் மற்றும் பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டி சார்பாக விசாரணையை பார்வையிடுவதற்கு ஒரு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சரான தக்கியுடின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமது வருகை அமைந்துள்ளது என்று என்று தக்கியுடின் தமது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார்