பெரிக்காத்தான் நேஷனலில் இந்திய சமூகத்தின் சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவராக அதன் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தலைமையேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக்கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனலில் இடம் பெற்றுள்ள வேளையில் அந்த கூட்டணியில் இந்திய சமூகத்தின் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு ஹம்ஸா சைனுடின் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹம்ஸா சைனுடின் தலைமையில் முதலாவது சிறப்புப்கூட்டம் கடந்த ஜுலை 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மஇகாவிலிருந்து வெளியேறியுள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பி. புனிதன், அந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் பெரிக்காத்தான்நேஷனலில் உச்சமன்றக்ட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பின்னர் இந்திய சிறப்பு நடவடிக்கை குழு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
