Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!
அரசியல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என்று பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆலன் தீ பூன் சோங் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீன வாக்காளர்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூரில் பணிபுரிபவர்கள் பலர் வாக்களிக்க வரத் திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தொகுதியில் 46.9% சீன வாக்காளர்கள் உள்ள நிலையில், இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று ஆலன் தீ வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆலன் தீ , பாரிசான் நேஷனல் வேட்பாளர் பி. பன்னீர்செல்வம் மற்றும் பெர்சாமாவின் பூ வெய் ஹான் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்து மக்கள் தங்களின் முக்கியப் புகாராக முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

Related News