கேபால படாஸ் , செப்டம்பர் 03-
இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளரின் பெயரை அம்னோ இந்த வாரத்தில் அறிவிக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வெளியிடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளரின் பெயர் குறித்து முடிவெடுத்து, அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர்கள் அனைத்தும் உச்சமன்றக்கூட்டத்தின் பரிசீலனைக்காக கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.








