Sep 21, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு குற்றச்சாட்டு: டுவான் இப்ராஹிமுக்கு 48 மணி நேர கெடு விதித்த அன்வார்
அரசியல்

அவதூறு குற்றச்சாட்டு: டுவான் இப்ராஹிமுக்கு 48 மணி நேர கெடு விதித்த அன்வார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் லிம் ஹுய் யிங் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோரி அந்தக் கருத்துகளைத் திரும்பப் பெறுமாறு அன்வார் தரப்பில் இருந்து சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், துவான் இப்ராஹிம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அன்வாரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி, பகாங் மாநிலம் பெல்டா ஜெந்தராக் உத்தாரா, கோலா கிராவ்வில் நடைபெற்ற பாஸ் அரசியல் கூட்டத்தில், நெகிரி செம்பிலான் அரச குடும்பம் மற்றும் போலீஸ் விசாரணைகளில் பிரதமர் அன்வார் தலையிட்டதாக துவான் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியதாக சட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவான் இப்ராஹிமின் அந்த உரையின் சில பகுதிகள், அடுத்த நாளே அவரது முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களை விமர்சிப்பவர்கள் விரைவில் போலீஸ் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்று துவான் இப்ராஹிம் தமது உரையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "நிதி முறைகேடு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்" குறித்து அவர் பேசிய கருத்துகள், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது ஆட்சியைக் குறிக்கும் வகையில் பொதுமக்களால் புரிந்துகொள்ளப்படலாம் என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

எனினும், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அன்வார் மறுத்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்தவர்களை விசாரிக்க போலீசாருக்குத் தாம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரங்களில் ஒருபோதும் தலையிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், துவான் இப்ராஹிம் தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும், நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்றும் அன்வார் கோரியுள்ளார்.

மேலும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைக்கமாட்டேன் என்று அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இழப்பீடும், வழக்குச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன.

இதனிடயே, துவான் இப்ராஹிம் முன்வைத்த ஊழல், நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி கூறப்பட்டுள்ளதாக அன்வாரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்துள்ளார்.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்