மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சின்னத்தைப் பயன்படுத்த பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி தனது சொந்த சின்னத்தையோ அல்லது பாரிசான் நேஷனல் சின்னத்தையோ பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தொகுதிப் பங்கீடு மற்றும் அரசியல் ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஹாடி தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்தில் மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஸ் கட்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.








