கோத்தா கினபாலு, நவம்பர்.15-
சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த மாநிலத்திற்கு இன்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் சிறப்பு விமானம், இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தஞ்சோங் ஆருவில் உள்ள கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இன்று கோத்தா கினபாலுவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார். கோத்தா கினபாலுவில் உள்ள சீன சமூகத்தையும் பிரதமர் சந்திப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








