May 4, 2026
Thisaigal NewsYouTube
"அம்னோவில் இணையும் எண்ணம் இல்லை ; பாஸ் கட்சியே என் எதிர்காலம்" - அனுவார் மூசா அறிவிப்பு
அரசியல்

Share:

அம்னோவில் மீண்டும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அம்னோவிலிருந்து விலகி, பாஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தற்போது பாஸ் கட்சியை விட்டு அம்னோவில் மீண்டும் இணைய தனக்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி தான் தனது எதிர்காலமாகக் கருதுவதாகவும், அதில் தனிப்பட்ட முறையில் கொள்கைக்காகப் போராட இடமிருப்பதாகவும் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அம்னோவிலிருந்து விலகி, பாஸ் கட்சியில் இணைந்த மற்ற உறுப்பினர்களும், அக்கட்சியிலேயே தொடர்வார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அனுவார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அனைவரும், எந்த ஒரு நிபந்தனையும் இன்றி, கட்சியில் மீண்டும் இணையலாம் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கடந்த வாரம் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு