Sep 23, 2026
Thisaigal NewsYouTube
போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா முன்னேற்றம்
அரசியல்

போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா முன்னேற்றம்

Share:

அனைத்துலக நிர்வாகம் மேம்பாட்டு நிறுவனத்தின் உலக போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா 8 இடங்கள் முன்னேறி 15வது இடத்தைப் பிடித்துள்ளது. இது மடானி பொருளாதார கட்டமைப்பு சரியான பாதையில் செல்வதை நிரூபிப்பதாக மலேசிய சிறு மற்றும் நடுத்தர வர்த்தக தொழில் முனைவோர் சங்கமான சாமெண்டா தெரிவித்துள்ளது.

நிர்வாகச் செயல்முறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் 'இல்டிசாம் சட்டம்' போன்ற அரசாங்கத்தின் தீவிர முயற்சிகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ வில்லியம் எங் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உலகளவில் அரசாங்க செயல்திறன் 14வது இடத்திற்கும், வணிகச் செயல்திறன் 16வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

இந்த நேர்மறையான வளர்ச்சியைத் தொடர, உள்ளூர் அதிகாரிகளிலும் சிவப்பு நாடா முறையை நீக்குவதுடன், வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் குறைந்தபட்சம் 40 சதவீத உள்ளூர் விநியோகச் சங்கிலி பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாமெண்டா வலியுறுத்தியுள்ளது.

Related News