Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை

கோலாலம்பூர், ஜூன்.09-

இவ்வாண்டுடன் தனது செனட்டர் பதவி முடிவுறும் நிலையில் பிகேஆர் கட்சியில் இணைவதன் வாயிலாக இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்று வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

அம்னோவிலிருந்து விலகிய பின்னர் இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் தம்முடன் நடத்தப்படவில்லை என்பதையும் ஒரு பொருளாதார நிபுணருமான தெங்கு ஸாஃப்ருல் தெளிவுபடுத்தினார்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது மக்கள் பணத்தை விரயமாக்கும் செயலாகும். அதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →