Sep 15, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநில புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிப்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநில புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிப்பு

Share:

கோலா பிலா, ஆகஸ்ட்.02-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

இதற்காக அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், பின்னர் மாநில ஆட்சியாளர் Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir-இன் ஒப்புதலுக்காக பட்டியல் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகிய இரு கூட்டணிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்று முடிந்த மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளிலும், பெரிகாத்தான் நேஷனல் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி