Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

Share:

ஜோகூர் பாரு, மே.17-

ஒற்றுமை அரசாங்கத்திற்குள் நிலவும் உறவுகள் மேலும் சீர்கெடும் பட்சத்தில், முன்கூட்டியே பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியானது இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜோகூரில் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் 2026 மாநாட்டில் உரையாற்றிய அக்கூட்டணியின் தலைவரான அன்வார், அரசியல் கூட்டணிக்குள் உள்ள உறவை சிலர் விளையாட்டாக எடுத்துக் கொண்டால், மக்களிடமே மீண்டும் ஆணையைப் பெற நாடு முழுவதும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகள் மோதல் அரசியலைத் தேர்வு செய்தால், பக்காத்தான் ஹராப்பான் அதற்கு “உறுதியான பதில்” அளிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது, ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் கூட்டணி, அனைத்து 56 மாநில தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து வெளியாகியுள்ளது.

அதே வேளையில், நெகிரி செம்பிலானில் தேவையான சூழல் ஏற்பட்டால் முழுமையான போட்டிக்குத் தயாராக இருப்பதாக ஜசெக-வும் அறிவித்திருந்தது.

இதனிடையே, சிலாங்கூர், பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் தயார் நிலையைப் பற்றி, விரைவில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒற்றுமை அரசாங்கம் அரசியல் நிலைத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் சீர்திருத்தங்களில் கவனமாக செயல்பட்டதாகவும், அதற்கிடையில் பல அழுத்தங்களை சந்தித்ததாகவும் அவர் தனது உரையில் விளக்கமளித்துள்ளார்.

Related News

பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு  வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்